Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துாரில் பவுர்ணமி வழிபாடு; ... பூ பல்லக்கில் வலம் வந்த ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் பூ பல்லக்கில் வலம் வந்த ராமலிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கார்த்திகை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு

பதிவு செய்த நாள்

17 அக்
2024
08:10

சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்திற்கான புதிய மேல் சாந்தி தேர்வு செய்யப்பட்டனர்.


நேற்று மாலை, 5:00 மணிக்கு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடைதிறந்து விளக்கேற்றியதும் பக்தர்கள் 18 படிகள் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திருநீறு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மேல் சாந்தி கோவில் முன்புறமுள்ள ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.


இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு மூலவருக்கு அபிஷேகம் நடத்தி, நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் துவங்கியது. காலை, 7:30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கான மேல்சாந்தியை தேர்வு செய்யும் குலுக்கல் தேர்வு நடைபெற்றது. இதில் கேரளா, கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அருண் குமார் நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரம் கோவிலில் நடைபெற்ற குலுக்கல் தேர்வில் கோழிக்கோடு வாசுதேவன் நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி ஐயப்பனுக்கு பூஜைகள் செய்வார். அக்., 22 வரை நடை திறந்திருக்கும். தினமும் காலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு, 7:00க்கு படி பூஜை, இரவு 9:00க்கு அத்தாழ பூஜை நடக்கும். ஐப்பசி மாத பூஜைகள் முடிவடைந்து அக்., 25 இரவு 10:00க்கு நடை அடைக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar