திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2024 10:10
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நடந்த புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும், மூலவர் பெருமாள் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு ஏக தின பிரம்மோற்சவம் நடந்தது காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 6:30 மணிக்கு தோமாலை சேவை, காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள் அம்சவாகன சேவையில் அருள்பாலித்தார். 9:00 மணிக்கு சிம்ம வாகன சேவை, 10:00 மணிக்கு அனுமந்த் வாகன சேவை, காலை 11:00 மணிக்கு சேஷ வாகன சேவை, பகல் 12:00 மணிக்கு கருட வாகன சேவை நடந்தது. மாலை 3:00 மணிக்கு யானை வாகனம், 4:00 மணிக்கு சூர்ணோற்சவம், 5:00 மணிக்கு குதிரை வாகன சேவை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருத்தேரில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உள்புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி, 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.