Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மயூரநாதர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு ... நாச்சியார்புரத்திற்கு மாட்டு வண்டியில் சென்ற  63 நாயன்மார்கள், ஆழ்வார் சிலை நாச்சியார்புரத்திற்கு மாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்வருவத்துார் பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை; செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
மேல்வருவத்துார் பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை; செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

18 அக்
2024
12:10

மேல்மருவத்துார்; மேல்வருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில், பங்காரு அடிகளார் திருவுருவச்சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில், பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை விழா, கடந்த 16ம் தேதி குருபீடத்தில் துவங்கியது.


வழிபாடு; கருவறையில், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலாங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சித்தர்பீடம் வந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு, சித்தர் பீடத்தில் கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதன்பின், குரு பீடத்தில் பங்காரு அடிகளார் திருவுருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, லட்சுமி பங்காரு அடிகளார் தீபாராதனை காட்டி வழிபட்டார். கருவறையில் ஏற்றப்பட்ட அருள்ஞான தீபம், சித்தர்பீடம் முழுதும் வலம் வந்து, ஓம்சக்தி மேடை முன், பக்தர்களின் வழிபாட்டிற்காக பொருத்தப்பட்டது.


வேள்வி பூஜை; தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மன் கருவறை, குரு பீடத்தின் முன், யாககுண்டங்கள் அமைத்து, முதல் கால வேள்வி பூஜை நடந்தது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ் மற்றும் ஸ்ரீலேகா செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரண்டாம் கால வேள்வி பூஜையும், நாளை குடமுழுக்கும், பங்காரு அடிகளார் திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar