Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குயவன்குடி ஷீரடி சாய்பாபா கோயிலில் ... சித்திரெட்டிபட்டி ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் சித்திரெட்டிபட்டி ஜீவ சமாதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை, மாளிகைபுறம் கோவில்களுக்கு புதிய மேல் சாந்திகள் தேர்வு
எழுத்தின் அளவு:
சபரிமலை, மாளிகைபுறம் கோவில்களுக்கு புதிய மேல் சாந்திகள் தேர்வு

பதிவு செய்த நாள்

18 அக்
2024
01:10

சபரிமலை; சபரிமலை மற்றும் மாளிகைபுறம் கோவில்களுக்கு புதிய மேல் சாந்திகள், நேற்று காலை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக்கொள்வர்.


திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 25 பேரின் பெயர், துண்டு சீட்டுகளில் எழுதப்பட்டு, ஒவ்வொரு சீட்டாக சுருட்டி ஒரு வெள்ளி பாத்திரத்தில் போடப்பட்டது. மற்றொரு வெள்ளி பாத்திரத்தில், 24 வெள்ளை துண்டு காகிதங்களும், ஒரு துண்டு தாளில் மட்டும் மேல் சாந்தி எனவும் எழுதப்பட்டு, சுருட்டி போடப்பட்டது. பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் வர்மா, இரண்டு வெள்ளி பாத்திரங்களில் இருந்தும், இரண்டு துண்டு சீட்டுகளை எடுத்தார். 16வது துண்டு சீட்டில், கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரையைச் சேர்ந்த எஸ். அருண்குமார் நம்பூதிரி பெயர் வந்தது. அப்போது, மற்றொரு வெள்ளி பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சீட்டில், மேல் சாந்தி என்று வந்ததால், அவர் சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதுபோல, மாளிகைபுறத்தம்மன் கோவிலுக்காக தயாரிக்கப்பட்ட, 15 பெயர்கள் குலுக்கப்பட்டு, சிறுமி வைஷ்ணவி சீட்டுகளை எடுத்தார். 13-வது சீட்டாக, கோழிக்கோடு மாவட்டம் உளவன்னா என்ற இடத்தை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரி, மேல் சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக்கொள்வர். அதன் பின், ஓராண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar