Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சித்திரெட்டிபட்டி ஜீவ சமாதியில் ... சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

18 அக்
2024
03:10

நெல்லை; காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழைமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதில்  முக்கிய நிகழ்வாக அன்னை காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன்  இன்று காலை துவங்கியது.  திருவிழாவை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும் கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீ காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடிமரத்தில்  காலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்திற்கு  அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிமரத்திற்கு தா்பை புற்கள் கட்டி, பட்டுபுடவை, மலா் மாலைகள் அணிவித்து அலங்காிக்கப்பட்டு  சோடச உபசார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 


ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 தினங்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு ஸ்ரீ காந்திமதி அம்பாள்  திருநெல்வேலி நகா் நான்கு ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா  நடைபெறுகின்றது. வருகின்ற 28.10.24 - 11ம் திருநாள் அன்று மதியம் 12.00 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் அன்னைகாந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வும் மறுநாள் 29.10.24 அதிகாலை 4.30 - 05.30 மணிக்குள்  திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. அதனை தொடா்ந்து பகலில் பட்டிணபிரவேசமும் பின்னா் மூன்று தினங்கள் இரவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகின்றன.  நிறைவாக 01.11.24 அன்று சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டிணபிரவேச வீதிஉலாவும் நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினா் உபயதாரா்கள்  செய்து வருகின்றனா்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar