Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி சன்னிதானத்திடம் ...  ஆயிரத்து எட்டு லட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னபூர்னேஸ்வரி ஆயிரத்து எட்டு லட்டு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலேசியா முருகனுக்கு நாச்சியார்கோவிலில் தயாராகும் 175 கிலோவிலான வெண்கல வேல்
எழுத்தின் அளவு:
மலேசியா முருகனுக்கு நாச்சியார்கோவிலில் தயாராகும் 175 கிலோவிலான வெண்கல வேல்

பதிவு செய்த நாள்

01 நவ
2024
07:11

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலை சேர்ந்த விக்னேஷ்,43, இவர், சுவாமிநாதன் கலைக்கூடம் என்ற பெயரில் சுவாமி சிலைகள், பித்தளை குத்துவிளக்குகள், கோவில் மணிகள் போன்றவற்றை தயார் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்தாண்டு மலேசியா நாட்டின் கிலாங்கில், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வேல் வடிவமைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில், முடிவு செய்யப்பட்டது. இதற்காக விக்கேனஷிடம் கோவில் நிர்வாகத்தினர் வேல் செய்ய ஆடர் கொடுத்தனர். இதில், 15 அடி உயரத்தில், ஓம் மற்றும் மயில் உருவம் பொறித்த வெண்கலத்தாலான வேல் வடிவமைக்கப்பட்டு, அடுத்த மாதம் அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. 


இது குறித்து விக்னேஷ் கூறியதாவது:  மலேசியாவில், கிலாங் நகரில், சுப்பிரமணிய சுவாமி கோவில், மலேசிய தமிழர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இக்கோவிலில், வரும் 2025ம் ஆண்டு பிப்., மாதம் கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதற்காக கோவிலில், பிரமாண்டமான வகையில் வேல் ஒன்றை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். இந்த வேலின் மேல் பாகம் மட்டும், 175 கிலோ எடையில் 15 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வேல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளன. மேலும், வெண்கலத்தில், 55 அடி உயரத்தினாலான குழாயுடன், அந்த 15 அடி உயரம் உள்ள வேலை இணைத்து மொத்தம் 70 அடி உயரத்தில், பொருத்தப்பட உள்ளது இவ்வாறு அவர் கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar