Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகில் எங்கு சென்றாலும் ஹிந்து ... திருப்பரங்குன்றம் கோயிலில் சஷ்டி யாகசாலை பூஜை; தயிர் சாதம் படைத்து தரிசனம் திருப்பரங்குன்றம் கோயிலில் சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புளியம்பாறையில் நெற்கதிர் அறுவடை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புளியம்பாறையில் நெற்கதிர் அறுவடை திருவிழா

பதிவு செய்த நாள்

04 நவ
2024
03:11

 கூடலுார்; கூடலுார் புளியாம்பாறையில் பாரம்பரியமான பூ புத்தரி அறுவடை திருவிழா சிறப்பாக நடந்தது. கூடலுாரில் பழங்குடி மக்கள் சார்பில் நெற் பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலமுடன் இருக்கவும், ஆண்டு தோறும் நெல் அறுவடைக்கு முன்பாக பூ புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழாவை, ஐப்பசி மாதம், 10ம் நாள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டின் விழா துவக்கமாக நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலில் கடந்த, 26ம் தேதி இவ்விழா நடந்தது. தொடர்ந்து பழமையான கோவில்களில் பூ புத்தரி அறுவடை திருவிழா நடைபெற்று வருகிறது.


அதன்படி, புளியாம்பாறை பகவதி மற்றும் ஆயிரம் வில்லி (சிவன்) கோவிலில் இவ்விழா நடந்தது. காலை சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 11:00 மணிக்கு கதிர் அறுவடை செய்வதற்காக கோவிலில் இருந்து பக்தர்கள், புளியம்வயல் அருகே உள்ள, வயலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து, நெற்கதிர்கள் அறுவடை செய்தனர். தொடர்ந்து, செண்டை மேளம் இசையுடன் நெற்கதிர் கட்டை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். கோவில், நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு, அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விவசாயிகள் கூறுகையில், ‘கோவிலில் பூஜை செய்து, வழங்கப்படும் நெற்கதிர்களை விவசாயிகள் வீட்டில் வைத்து பூஜை செய்வார். தொடர்ந்து, நெல் அறுவடை செய்வதை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனர்,’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar