Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தன காப்பு அலங்காரத்தில் காரமடை ... ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சத்ய சாய்பாபாவிற்கு சிறப்பு ஆர்த்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சத்ய சாய்பாபாவிற்கு சிறப்பு ஆர்த்தி

பதிவு செய்த நாள்

23 நவ
2024
02:11

 சென்னை; பகவான் சத்ய சாய்பாபாவின் 99வது அவதார தினம், சுந்தரத்தில், சத்ய சாய் சேவா அமைப்பின் சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சத்ய சாய் சமதியின் சென்னை தலைமையகமான சுந்தரம், ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால், 42 ஆண்டுகளுக்கு முன் சுந்தரம் திறக்கப்பட்டது. இதன் சார்பில், ஆண்டுதோறும் பகவான் சத்ய சாய் பாபாவின் பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாபாவின், 99வது அவதார தினத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு  ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நாகர்சங்கீர்தனத்துடன் விழா துவங்கியது. பின், அனைத்து சந்நிதிகளிலும் கொடியேற்றம், மங்கள வாத்தியம், நித்ய பூஜை மற்றும் ஸ்ரீ சாய் சுந்தரேஸ்வரர் சந்நிதியில் சாய் காயத்ரி ஹோமம் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஷீரடி பாபாவிற்கு அபிஷேகம், பூஜை, இளைஞர் பிரிவின் வேதபாராயணம், பஜனைகள், அனைத்து மாவட்டங்கள் சார்பில் ஸ்ரீ சத்ய சாய் சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. நண்பகலில், நாராயண சேவா மற்றும் வஸ்திர தானம் நடந்தது. மாலை வேத மந்திரம் ஓதப்பட்டது. அதைத் தொடர்ந்து சூரியநாராயணன் குழுவினரின் பக்தி இசை பாடப்பட்டது. பின், பகவானின் தெய்வீக சொற்பொழிவு நிகழ்ந்தது. பின், சுந்தரம் பஜன் குழுவினரின் பஜனைகளுடன் ஜூலா மஹோத்ஸவம், மஹா மங்கள ஆரத்தி, இரவு இளைஞர் பிரிவு வாயிலாக நடைபாதையில் வசிப்பவர்களுக்கு படுக்கை விரிப்புகள் விநியோகம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தரம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar