Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 4000 கி.மீ., பாதயாத்திரையாக ... சபரிமலையில் மலை போல குவியும் ஆடைகளால் அவதி.. இப்படி ஒரு ஐதீகம் இல்லை; தந்திரி சபரிமலையில் மலை போல குவியும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை மாளிகைபுறத்தில் தேங்காய் உருட்ட தடை; தந்திரி ராஜீவரரு வரவேற்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை மாளிகைபுறத்தில் தேங்காய் உருட்ட தடை; தந்திரி ராஜீவரரு வரவேற்பு

பதிவு செய்த நாள்

28 நவ
2024
05:11

சபரிமலை; சபரிமலை மளிகைபுறத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை கண்டிப்பாக நிறைவேற்றவும் தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது.


சபரிமலை மாளிகைபுறத்து அம்மன் கோயிலை சுற்றி தேங்காய் உருட்டுவதை வழிபாடாக பக்தர்கள் நடத்துகின்றனர். அது போல மஞ்சள் பொடியை கோயிலை சுற்றி தூவுவது தேவிக்கு கொண்டுவரப்படும் பிளவுஸ் துணிகளை கோயில் கோபுரத்தில் தூக்கி வீசுவது, அதை எடுக்க முண்டியடிப்பது போன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபடுகின்றனர். தேங்காய் காலில் இடித்தும் தேங்காயில் மிதித்து கீழே விழுந்தும் பக்தர்கள் காயமடைகின்றனர். இப்படி ஒரு ஐதீகம் சபரிமலையில் இல்லை என்று தந்திரியும் மேல் சாந்தியும் தொடர்ந்து எடுத்துக் கூறியும் பக்தர்கள் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் சபரிமலை டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், எஸ் முரளி கிருஷ்ணா ஆகியோர் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மளிகைபுறத்து அம்மன் கோயிலை சுற்றி தேங்காய் உருட்டுவதையும், கோயிலை சுற்றி மஞ்சள் பொடி தூவுவதையும் அனுமதிக்க முடியாது. இது பிற பக்தர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட விஷயங்கள் சபரிமலையில் ஐதீகம் இல்லை என்பதை தந்திரி தெளிவுபடுத்தி உள்ளார். கோயில் கோபுரத்தின் மீது பிளவுஸ் துணிகளை வீசக்கூடாது. இதை தேவசம்போர்டு கண்டிப்பாக நடைமுறை படுத்த வேண்டும். பக்தர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பை தொடர்ந்து ஒலிபெருக்கியில் வெளியிட வேண்டும். சபரிமலையில் 18ம் படி மற்றும் கோயில் சுற்றுப்புறங்களில் ஃப்ரீ லான்ஸர்கள் மற்றும் ஆன்லைன் சேனல் போட்டோகிராபர்கள், வீடியோ கிராபர்கள் ஒளிப்பதிவு செய்யக்கூடாது. தேவசம் போர்டின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே படம் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். 


தேங்காய் உருட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதாவது: இப்படி ஒரு ஐதீகம் சபரிமலையில் கிடையாது. யாரோ ஒருவர் தொடங்கி வைத்து இவ்வளவு பெரிதாகி அது மற்ற பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் நடைபெற்று வருகிறது. மஞ்சள் பொடியை வீசுவதும் பிளவுஸ் துணிகளை தூக்கி எறிவதும் தவறான செயல்கள். இதை நீதிமன்றம் தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar