Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சானூர் பிரம்மோற்சவம்; ... எகிப்தில் 2,100 ஆண்டுகள் பழமையான கோவில்; தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு எகிப்தில் 2,100 ஆண்டுகள் பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

05 டிச
2024
12:12

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச. 13ல் மலைமேல் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. 


கொடியேற்றம்: இன்று காலை சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். காலை 8:40 மணிக்கு கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். பட்டு துணி, மா இலை, தர்ப்பை புல் வைத்து கொடி கம்பத்தில் கட்டப்பட்டு அடிப்பாகத்தில் பால் உள்பட பல்வகை திரவிய அபிஷேங்கள் நடந்தது. திருவிழா நம்பியார் சிவகுரு சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. 


சுவாமி வீதி உலா: நாளை முதல் டிச. 13வரை தினம் காலை சிம்மாசனம், தங்கச்சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரத்திலும், இரவில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க குதிரை, காமதேனு வாகனங்களில் தினம் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர்.


சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை: திருவிழா 6ம் நாளான டிச. 10ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, டிச.11 காலையில் கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலையில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாளும், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். மஹா தீபம்: டிச.12ல் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், டிச. 13 காலையில் தேரோட்டம், மாலையில் மலைமேல் மஹாதீபம், இரவு சொக்கப்பனை தீபக் காட்சி,  டிச. 14ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்மை தேவன், சண்முகசுந்தரம், ராமையா, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar