Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா ... ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா; சரண கோஷத்துடன் கோலாகலம் ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மார்கழி ஏகாதசி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மார்கழி ஏகாதசி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

26 டிச
2024
05:12

கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், மார்கழி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.


கோவை மாவட்டத்தில் உள்ள, காரமடை அரங்கநாதர் கோவில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமாகும். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வைபவம் நடைபெறும். இன்று மார்கழி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கால சந்தி பூஜை, ஆராதனம், புண்யாவசனம், கலச ஆவாஹனம் ஆகியவையும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன் பின் பால், தயிர், தேன், நெய், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்பு பட்ட உடுத்தி அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில் மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தின் உள்ளே வலம் வந்தார். பின்பு ஆஸ்தானம் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உச்ச கால பூஜையும், வேதபாராயணம், சாற்று முறை முடிந்த பின், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தர்கள் முத்துசாமி, ஜெகநாதன், ஆனந்த் கிருஷ்ணன் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். வைபவ ஏற்பாட்டினை அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar