Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுாரில் இருந்து பழநிக்கு ... மேல்மருவத்துார் தைப்பூச ஜோதி விழா; பெருக்கரணையில் குவியும் பக்தர்கள் மேல்மருவத்துார் தைப்பூச ஜோதி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பதிவு செய்த நாள்

28 டிச
2024
03:12

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், வரும் 31ம் தேதி, படித் திருவிழாவும், ஜன.1ம் தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடக்கிறது. இவ்விழாவிற்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிப்பட்டு செல்வர். மேலும், ஆண்டிற்கு 365 நாட்கள் குறிக்கும் வகையில், முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் உள்ளதால், 31ம் தேதி, காலை 6:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபடுவர்.


இதுதவிர, நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினரும் படிகள் தோறும் முருகப் பெருமானின் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர். இந்நிலையில், மலைப்படிகள்யோரம் கடைகள் வைத்திருப்பவர்கள் படிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், பக்தர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். ஆகையால், இன்று திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி தலைமையில், உதவி ஆணையர் விஜயகுமார், திருத்தணி வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் மற்றும் வருவாய், கோவில் ஊழியர்கள் கோவிலுக்கு செல்லும் சன்னிதி தெரு, மலைப்படிகள் மற்றும் மலைக்கோவில் தேர்வீதியில் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால், கடைக்காரர்கள், கோவில் ஊழியர்களுடன் வாக்குவாதம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar