Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாட்டுப் பொங்கல்; வீரட்டானேஸ்வரர் ... குடந்தை மடத்தில் பிறந்த கன்றுக்குட்டிக்கு துர்கா என பெயர் சூட்டி தொட்டிலில் வைத்து தாலாட்டு குடந்தை மடத்தில் பிறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி குமரகோட்ட முருகப்பெருமான் வைர வேலுடன் வெள்ளி தேரில் பவனி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி குமரகோட்ட முருகப்பெருமான் வைர வேலுடன் வெள்ளி தேரில் பவனி

பதிவு செய்த நாள்

15 ஜன
2025
05:01

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளும் முருகப்பெருமான், கோவில் பிரகாரத்தில் பவனி வருவார். இதில், ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதியான தை பொங்கல் தினத்தன்று மட்டும் வள்ளி, தெய்வானையுடன், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருவார். இந்நிலையில், இக்கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருவதால், நடப்பு ஆண்டு ராஜ வீதிகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. கோவில் பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தது. அதன்படி, தை பொங்கல் தினமான நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை நடந்தது. மாலையில், வெள்ளி தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில், வைர வேலுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். பல்வேறு பூஜைகளுக்குப் பின் சிவகண வாத்தியங்கள், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இன்னிசை வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, முருகப்பெருமான் கோவில் பிரகாரத்தில் பவனி வந்தார். பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து, சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கேசவன் மற்றும் உபயதாரர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar