Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் அங்காளம்மன் கோவிலில் ... சிங்கம்புணரி விநாயகர் கோவிலில் பால்குடவிழா சிங்கம்புணரி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா: ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி
எழுத்தின் அளவு:
திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா:  ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி

பதிவு செய்த நாள்

18 ஜன
2025
11:01

தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள், பகுலபஞ்சமி தினத்தில் முக்தி அடைந்தார். அங்கு ஆண்டுதோறும், பகுலபஞ்சமி தினத்தில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிக்கு ஆராதனை விழா ஐந்து நாட்கள் நடைபெறும்.

அதன்படி இந்தாண்டு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா, கடந்த ஜன.14ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர். விழாவின் முக்கிய நிழ்வான இன்று(18ம் தேதி) அதிகாலை, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டாகி, மேளதாளங்கள் முழங்க, வீதியுலவாக அவரின் சன்னதிக்கு வந்தனர். பிறகு, நாதஸ்வரம் நிகழ்ச்சியும், பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி,  ஜனனி, அருண்   பல்வேறு பகுதிகளில் வந்திருந்த கர்நாடக சங்கீத கலைஞர்கள் என ஆயிரக்கணக்கனோர்,  நாட்டை ராகத்தில் அமைந்த பாடலில் துவங்கி, கௌளை ராகம், ஆரபி ராகம்,வராளி ராகம், இறுதியாக ஸ்ரீராகம் என பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீசத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது.  இதை தொடர்ந்து பல்வேறு இசைக்கலைஞர்களின் ஹரிகதை, பாட்டு, புல்லாங்குழல், நாகசுரம் நகிழ்ச்சிகளும், இரவு 10:40 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பள்ளிக்கரணை; பள்ளிக்கரணை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருச்சானூர் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar