Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ... திருத்தணி ஷீரடி சாய்பாபா கோயிலில் 22ம் ஆண்டு விழா திருத்தணி ஷீரடி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்;  பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

06 பிப்
2025
03:02

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம் நடந்தது. நாளை (பிப். 7) தெப்பத் திருவிழா நடக்கிறது.

முகூர்த்த கால்: சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. ரோடு அருகேயுள்ள தெப்பக்குளம் கரையில் எழுந்தருளினர். கோயில் சிவாச்சார்யார்கள் யாகம் வளர்த்து சுத்தியல், அரிவாள், உளி, முகூர்த்தகாலுக்கு பூஜை செய்து, தீபாராதனை முடிந்து தெப்பக்குள் தண்ணீரில் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் கட்டப்பட்டது. மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச் செல்வம், சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்: 16கால் மண்டபம்முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பூஜை முடிந்து தேர் சக்கரங்களில் பூசனிக்காய்கள் வைத்து தேங்காய் உடைக்கப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இரவு சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மிதவை தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar