Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவில் ஆக்கிரமிப்பு ... வாரணாசியில் அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் கோலாகலம் வாரணாசியில் அன்னபூர்ணேஸ்வரியின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா: ராஜகோபுரத்திற்கு புதிய கலசம் பொருத்தப்பட்டது
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா: ராஜகோபுரத்திற்கு புதிய கலசம் பொருத்தப்பட்டது

பதிவு செய்த நாள்

07 பிப்
2025
11:02

தொண்டாமுத்தூர்; கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி ராஜகோபுரத்திற்கு புதிய கலசங்கள் பொருத்தப்பட்டன.


கோவை மாவட்டம், பேரூரில் உள்ள ஆயிரமாண்டு பழமையான கோவிலான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 10ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது. இக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாலாலயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கோவில் திருப்பணிகள் மற்றும் 49 வேதிகை மற்றும் 60 குண்டங்களுடன் யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி நடந்தது. தொடர்ந்து, கடந்த, 4ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று, காலை, அஷ்ட மூர்த்தி ஹோமமும், ஸம்ஹிதா ஹோமமும் நடந்தது. மாலையில், புனித மண் எடுத்துலும் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, அக்னி ஸங்க்ரஹணம், புனித தீர்த்தம் அழைத்தல், பரிவார மூர்த்திகள் கலசங்கள் யாகசாலைக்கு எழுந்தருளுதல் நடைபெற்றது. அதன்பின், கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி ராஜகோபுரத்திற்கு புதிய கலசங்கள் பொருத்தப்பட்டன.


மாலை, 4:30 மணிக்கு, மங்கல இசை, விநாயகர் பூஜை, முளைப்பாலிகை இடுதல், பிரதான தெய்வங்களான பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், பால தண்டபாணி கலாகரிஷனம் நடக்கிறது. தொடர்ந்து, பிரதான கலசங்கள் மற்றும் யாகசாலையில், 96 வகையான மூலிகை திரவியங்கள் தெளிக்கப்படும். பல தளங்களில் இருந்து வரும் ஓதுவாமூர்த்திகள், பண்ணிரு திருமுறை விண்ணப்பம் செய்கின்றனர். இரவு, 9:00 மணிக்கு, பூர்ணாகுதி, தீபாராதனையுடன் முதல் கால வேள்வி பூஜை முடிவடையும். தொடர்ந்து நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை நடக்கிறது. வரும், 10ம் தேதி, காலை, 9:50 மணி முதல் 10:05 மணி வரை, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar