Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... கோவில்களின் மகா கும்பமேளா; திருப்பதியில் சர்வதேச கோயில்கள் மாநாடு கோலாகலம் கோவில்களின் மகா கும்பமேளா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அருகே விஜயநகர காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி அருகே விஜயநகர காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

18 பிப்
2025
11:02

செஞ்சி; செஞ்சி அருகே விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்த 658 ஆண்டுகள் பழமையான கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள மிக பழமையான சோமநாதீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்ய கிராம மக்கள் முடிவு செய்து திருப்பணிகளை துவக்கி உள்ளனர். கோவில் கட்டுமானங்களை பிரித்த போது அதில் கல்வெட்டுகள் இருந்தை கண்டறிந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் சோமசமுத்திரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து அவர் கூறியதாவது. சோமசமுத்திரத்தை சேர்ந்த அருள், கொடுத்த தகவலின் பேரில் ஆய்வில் ஈடுபட்டேன். கோவில் திருப்பணிக்காக பிரித்து வைத்துள்ள கற்களில் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதில் ஐந்து கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. முதல் கல்வெட்டில், 1289ன் மேல் செல்லா ஞ்சமியும் பெற்ற புத‌வாரத்து மிலே படை போகயில் இரறக்கு உதக பூர்வமாக என்றும், 2வது கல்வெட்டில், ன் பாஷைக்குத் தப்புவ ராயர கண்டன் வைய கருமார யற்று பூறுவ பக்ஷத்து பல்குன்ற கோட்டத்து சிங்கபுர நாட்டும் பண்ணி இரு என்றும், 3வது கல்வெட்டில், நன்செய் புன்செய் நாற்பா வூரை நோக்கி வரும் உபாதி ஊர்வழி காணிக்கை விற்ப வரி தனப் பணம் அமஞ்சித் தா, என குறிப்பிட்டுளளனர். மேலும் இரண்டு முறறு பெறாத இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.


இது குறித்து புதுச்சேரி மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபாலிடம் ஆலோசித்த போது, அவர் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சக ஆண்டு 1289 என்பது, ஆங்கில ஆண்டு 1367 ஐ குறிக்கும். இந்த ஆண்டு விஜயநகர மன்னர்கள் காலமாகும். இக்காலகட்டத்தில் விஜயநகரப் பேரரசின் மகா மண்டலீஸ்வரராக குமார கம்பணர் இருந்துள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதி பல்குன்றக் கோட்டம், சிங்கபுர நாட்டற்கு உட்பட்டு இருந்துள்ளது. இந்த கல்வெட்டில் கிராமத்தில் கிடைத்த வரி வருவாய் மூலம் கோயில் திருப்பணிகள் செய்திருப்பதை பதிவு செய்துள்ளனர் என்பதையும், கல்வெட்டு 658 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பதையும் அறிய முடிகிறது. மேலும் இங்கு கல்வெட்டுகள் இருப்பதற்கு வாய்ப்புகள், முழுமையான ஆய்வு நடத்தினால் கோவிலின் காலம் உட்பட மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கிடைத்துள்ள கல்வெட்டுகள் மிக முக்கியமாவை. இதை கிராம மக்கள் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar