Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் கோயிலில் மாசி ... எம்பார் ஜீயர் சுவாமிகளின் 100வது திருநட்சத்திர பூர்த்தி விழா எம்பார் ஜீயர் சுவாமிகளின் 100வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

06 மார்
2025
11:03

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது.


கோவை மாவட்டத்தில் உள்ள, வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த் திருவிழா நேற்று இரவு கிராம சாந்தியுடன் துவங்கியது. இன்று காலை கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கொடியேற்றம் விழா துவங்கியது. காலை, 10:00 மணிக்கு கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு கொடி மரத்தின் கீழே, யாக வேள்வி பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து, 11:00 மணிக்கு, 40 அடி உயரமுள்ள கொடி மரத்தில், கருடாழ்வார் உருவப் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் இருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என கோஷம் போட்டனர். நூற்றுக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதியும், சேகண்டி அடித்தனர். இந்த சத்தம் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. அப்போது கோவிலின் மேலே வானத்தில் பருந்து ஒன்று, வட்டமிட்டு கொண்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள் கைகூப்பி வணங்கினர்.


ஏழாம் தேதி சிம்ம வாகனத்திலும், எட்டாம் தேதி அனுமந்த வாகனத்திலும், ஒன்பதாம் தேதி கருட வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. பத்தாம் தேதி பெட்டத்தம்மன் மலையில் இருந்து அம்மன் அழைப்பும், 11ம் தேதி காலை 5:30 மணிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற உள்ளது. 12-ம் தேதி அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருள உள்ளார். அன்று மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. 13ம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 14ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் (பொறுப்பு) பேபி ஷாலினி, அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar