பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருக்கல்யாணம்; பக்தர்கள் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2025 12:03
பழநி; பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்.21 இரவு முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. நேற்று திருக்கல்யாணத்தை யொட்டி கோவில் முன் மாரியம்மன் எழுந்தருள அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா நடைபெற்றது. நாளை இரவு 10:00 மணிக்கு மேல் கொடியிறக்குதுடன் திருவிழா நிறைவடைகிறது.