Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் அழகருக்கு தயாராகுது ... திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப விழாவில் பக்தர்கள் தரிசனம் திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18ம் நுாற்றாண்டு சிலை ஆரியூரில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
18ம் நுாற்றாண்டு சிலை ஆரியூரில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

15 மார்
2025
01:03

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், பேராசிரியர் மணிவண்ணன் கொண்ட குழுவினர் அன்னவாசல் அருகே ஆரியூரில் கல்வெட்டு தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஆரியூர் ஊருக்குள் செல்லும் சாலையில் 50 மீட்டர் துாரத்தில் மரத்தில் சாத்தப்பட்ட நிலையில் இரு துண்டுகளாக உடைந்த நிலையில், 18ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் கற்சிலை காணப்பட்டது. இதை ஊர்மக்கள் தலைவிரிச்சாங்காளி என, அழைத்து வருகின்றனர்.

காளிதாஸ் கூறியதாவது: அய்யனார் வழிபாடு, ஆசீவக சமய வழிபாட்டு முறையாகும். இந்த சிலையானது, 1.5 அடி உயரமும், அரை அடி அகலமும் கொண்டது.

ஜடா மகுட சடாபாரத்துடன் காதுகளில் குண்டலங்கள் அணிந்தும், கழுத்தில் ஆபரணங்களுடன் மார்பில் முப்புரி நுால் கொண்டும், இடையணியும் கச்சையும் அணிந்து காணப்படுகிறது.

இரு கைகளிலும் கவுடர் என்னும் கைத்தண்டைக் காப்புகள் அணிந்தும், வலது காலை நீட்டியும், இடது காலை மடக்கியும், இடுப்பையும், இடது காலையும் இணைக்கும் நிட்டை யோகப்பட்டை அணிந்தும் அமர்ந்த கோலத்தில் அபயகரத்துடன் காட்சி தருகிறது.

சாட்டையுடன் கூடிய வலது கரம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த அய்யனார் சிலையை யாரோ சமூக விரோதிகள் உடைத்திருக்கலாம். இதுபோன்ற தொல்லியல் மரபுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டியது கடமை.


இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 
temple news
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar