Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் சுப்ரமணியர் சுவாமிக்கு ... ஒப்பிலியப்பன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஒப்பிலியப்பன் கோவில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2000 ஆண்டு பழமையான கருணாசாமி கோவிலில் மூலவர் மீது சூரிய கதிர்கள்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
2000 ஆண்டு பழமையான கருணாசாமி கோவிலில் மூலவர் மீது சூரிய கதிர்கள்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

17 மார்
2025
10:03

தஞ்சாவூர்,-  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவிலில், சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தஞ்சாவூர் அடுத்த  கரந்தையில்,  பெரியநாயகி அம்மன் உடனுறை கருணாசாமி  கோவில் என்கிற,  வசிஷ்டேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது‌. தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் சோழ மன்னனுக்கு தோல் நோயை குணமாக்கியதாக தல வரலாறு கூறுகிறது.  இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி  மாதம் 3,4,5 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை நடைபெறும். அதேபோல் இந்தாண்டு சூரிய பூஜை இன்று அதிகாலை  நடைபெற்றது. சூரிய உதயத்தில் கருணாசுவாமி மீது சூரிய கதிர்கள் விழுந்ததும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் ஆகிய  அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar