Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சஷ்டி விரதம்; முருகனை வழிபட சங்கடம் ... சுக்கிரவார விரதம்; முருகனை வழிபட்டால் வெற்றி, இழந்த செல்வம் யாவும் கிடைக்கும்! சுக்கிரவார விரதம்; முருகனை ...
முதல் பக்கம் » துளிகள்
இராகு கேதுவால் காலக்கணிதத்தில் வந்த குழப்பம்..!
எழுத்தின் அளவு:
இராகு கேதுவால் காலக்கணிதத்தில் வந்த குழப்பம்..!

பதிவு செய்த நாள்

20 மார்
2025
05:03

நாள் செய்வதை நல்லோர் கூட செய்ய மாட்டார்கள்!” என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு நாள் முக்கியம் என்றால் அதில் குறுக்கிடும் நல்ல நேரம் என்னும் கால அளவு அதை விட முக்கியத்துவம் வாய்ந்தது.  நல்ல நாளில், நல்ல நேரம் பார்த்து செய்யக் கூடிய செயல்கள் நிச்சயம் பெரும்பாலும் வெற்றி பெறும். நல்ல நேரம் : ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுப கிரகங்களின் பார்வை பூமிக்கு கிடைக்கும். அந்த நேரத்தை முன்பே கணக்கிட்டு கொடுத்து இருப்பார்கள். அது காலை, மாலை என இருவேளைகளில் வரும். அந்த நேரத்தில் தீய கிரகங்களின் அல்லது தீய சக்திகளின் ஆற்றல் தணிந்து இருக்கும். இதுவே நல்ல நேரம் ஆகும்.


இதில் கௌரி பஞ்சாங்கம் அல்லது கௌரி நல்ல நேரம் என்பது ஆதி காலத்தில் இருந்த முறை. அதாவது கிருத யுகத்தில் இருந்தே அது இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதாவது பாற்கடலை கடையும் முன்பிருந்தே கௌரி பஞ்சாங்கம் இருக்கிறது. இராகு காலம், எம கண்டம்: பாற்கடலை கடைந்த சமயத்தில் இராகு என்னும் அரக்க தளபதி திருமாலின் அவதாரமான மோகினியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு திருட்டுத் தனமாக அமிர்தம் பருகி விடுகிறான். இதனால் திருமால் சுதர்சன சக்கரத்தை கொண்டு அவன் தலையை கொய்ய, அம்ருதம் உண்ட இராகுவின் உடல் இரண்டாகப் பிரிந்து இராகு/ கேதுக்கள் ஆகின்றன. இவர்கள் தவம் செய்து கிரக பதவியையும் அடைந்து விடுகின்றனர்.


இந்த சமயத்தில் தான் காலக் கணிதத்தில் ஒரு குழப்பம் வருகிறது. சூரியன் முதல் சனி வரையில் ஏழு கிரகங்களுக்கு நாட்களை கொடுத்து விட்ட நிலையில், இராகு/ கேதுவிற்கு எதை கொடுப்பது? இறுதியாக சிவபெருமானின் கட்டளை இதற்கு விடையாக வருகிறது.  ஒவ்வொருவர் நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இராகு, கேதுக்களுக்கு தர உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்த நேரத்தில், அந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் இராகு / கேதுக்கள் வல்லமையுடன் செயல் படுவார்கள். அதுவே இராகு காலம், எம கண்டம் எனப் பெயர் பெற்றது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 
temple news

ஜொலிக்க... ஏப்ரல் 14,2026

உடலுக்கு ஆரோக்கியம், ஆத்மாவிற்கு பலம் தருபவர் சூரியன். இதையே ‘ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்’ என்கிறது ... மேலும்
 
temple news

பசுவை வணங்கு ஏப்ரல் 14,2026

* பசுவை வணங்கு. பிரம்மா, விஷ்ணு, சிவனை வழிபட்டதற்கு சமம்.  * பசுவை ஒரு முறை சுற்று. உலகத்தை சுற்றுவதற்கு ... மேலும்
 
temple news
தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ பச்சடியை சாப்பிடுவது அவசியம். இந்த பச்சடியில்   வேப்பம்பூ, புளி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar