Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலையில் மகா பெரியவா அனுஷ பூஜை; ... கோவை சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் நடத்த ஐகோர்ட் உத்தரவு கோவை சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராய்ச்சூர் மஹாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராய்ச்சூர் மஹாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு

பதிவு செய்த நாள்

21 மார்
2025
12:03

ராய்ச்சூர்; ராய்ச்சூர் மாவட்டம், சிரவாரா தாலுகாவின் கல்லுாரில் மஹாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இது, வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலாகும். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். காணிக்கையும் அதிகம் வசூலாகிறது.


அர்ச்சகர் நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போன்று பூஜையை முடித்த பின், நடையை சாத்தி விட்டு, வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம கும்பல், பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்தனர். 80 கிராம் எடையுள்ள வெங்கடேஸ்வர சுவாமியின் கிரீடம், 30 கிராம் எடையுள்ள லட்சுமி கிரீடம், 140 ரூபாய் மதிப்புள்ள பாதங்கள் உட்பட 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி கொண்டு தப்பியது. நேற்று காலை பூஜை செய்ய, அர்ச்சகர் கோவிலுக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சிரவாரா போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்கின்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலில், அதிக அளவில் தங்க நகைகள் இருப்பது தெரிந்தும், பாதுகாப்பு ஊழியர் நியமிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கண்காணிப்பு கேமராவும் பொருத்தவில்லை. இதை நோட்டம் விட்டு, மர்ம கும்பல் திருட்டில் ஈடுபட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருடர்களை கண்டுபிடித்து, நகைகளை மீட்கும்படி போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளனர். போலீசாரும் சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். திருட்டில் உள்ளூர்வாசிகளில் யாருக்காவது தொடர்பிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar