Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சயனப்பெருமாள் சிலை ரகசியங்கள்; ... அமாவாசை விரதம்; முன்னோர் வழிபாடு வாழ்வை வளமாக்கும்..! அமாவாசை விரதம்; முன்னோர் வழிபாடு ...
முதல் பக்கம் » துளிகள்
பிரதோஷம், மாதசிவராத்திரி; சிவனை நினைத்தாலும் போதும் நல்லதே நடக்கும்!
எழுத்தின் அளவு:
பிரதோஷம், மாதசிவராத்திரி; சிவனை நினைத்தாலும் போதும் நல்லதே நடக்கும்!

பதிவு செய்த நாள்

27 மார்
2025
10:03

இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, சொர்க்கலோக பாக்கியம் கிடைக்கும். ஒருவரது 21 தலைமுறைகளும் நற்கதி தருவது சிவராத்திரி வழிபாடு. பிரதோஷமான இன்று சிவனை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். இன்று பக்தியுடன் வழிபட்டால் பரமன் அருள் நிச்சயம் கிடைக்கும்.


சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். இன்று ஈசனை வழிபட நல்லதே நடக்கும். துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.


பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது. காலை, மாலை வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபட செய்வது நல்லது.

 
மேலும் துளிகள் »
temple news
விவசாயிகளின் தண்ணீர் கஷ்டத்தை போக்க, மன்னரின் கனவில் தோன்றி தண்ணீர் வரவழைத்த ஆதிசேஷன் வரலாறு ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இடம் தர்மஸ்தலா. இங்கு தான் உலகப்புகழ் பெற்ற மஞ்சுநாத ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு டவுன் ஹலேஹூப்பள்ளியில் ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியின் குந்தாபூர் தாலுகா கமலாசிலே கிராமத்தில், பிராமி துர்கா ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், மங்களூர் அருகில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிருங்கேரி சாரதாதேவி திருக்கோயில். இங்கே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar