Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுக்கோட்டையில் 19ம் நுாற்றாண்டு ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலைக்கு 54வது ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலைக்கு 54வது ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

27 மார்
2025
10:03

பல்லடம்; பருவாய் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள், 54வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.


பல்லடத்தை அடுத்த, பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை காவடி குழுவினர் ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். கடந்த, 1971ம் ஆண்டு துவங்கிய இந்த பாதயாத்திரை பயணம், தொடர்ந்து, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், 54வது ஆண்டு பாதயாத்திரை பயணத்தை துவக்கினர். பாதயாத்திரை குழு தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். முன்னதாக, மாலை அணிந்த பக்தர்கள், பருவாய் மாரியம்மன் கோவில் திடலில் கூடி காவடி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்த பின், அங்கிருந்து நடை பயணமாக சென்ற குழுவினர், விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தனர். இதனையடுத்து, குடும்பத்தினர் ஒன்று கூடி அவர்களை பாதயாத்திரைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்று, திரும்பி வரும் வழியில் பேரூர் கோவிலில் தரிசனம் செய்வோம். இதனையடுத்து, யுகாதி பண்டிகை அன்று கிராமத்துக்கு திரும்புவோம். வெள்ளியங்கிரி மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தில் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவோம். கொரோனா காலத்தை தவிர்த்து, 54 ஆண்டுகளாக இந்த வெள்ளியங்கிரி பாதயாத்திரை மற்றும் வழிபாடு தொடர்ந்து நடந்து வருகிறது. ஆண்டுதோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது என ஈஸ்வரன் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar