Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதியில் பாஷ்யகார ... உத்தரகோசமங்கையில் நடராஜருக்கு 16 வகை அபிஷேகம்; காலங்களை கணக்கிட்டு நடக்கிறது உத்தரகோசமங்கையில் நடராஜருக்கு 16 வகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உடைந்த நிலையில் அபிஷேக சங்குகள்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உடைந்த நிலையில் அபிஷேக சங்குகள்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2025
11:04

ராமேஸ்வரம்;ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படும் சங்குகள் அழுக்கு படிந்தும், உடைந்தும் கிடந்ததை கண்டு பக்தர்கள் முகம் சுளித்தனர்.இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்கின்றனர் மேலும் பக்தர்கள் கோயிலில் 108 மற்றும் 1008 சங்குகள் அபிஷேகம் பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இப்பூஜை கோயிலுக்குள் சுவாமி சன்னதி அருகில் பக்தர்கள் முன்னிலையில் சங்குகளை வைத்து குருக்கள் பூஜை செய்து பிரசாதம் வழங்குவர். இதற்காக கோயில் நிர்வாகம் ரூ.3000 மற்றும் ரூ.10 ஆயிரம் கட்டணமும் வசூலிக்கிறது.

பக்தர்கள் முகம் சுளிப்பு; கோயிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் ஆன்மிக நன்கொடையாளர்கள் தானமாக வழங்கிய 1008 சங்குகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்காமல் பூஜை முடிந்ததும் சாக்கு மூடையில் அள்ளி போட்டு மரப்பெட்டிக்குள் வைக்கின்றனர். இதனால் 90 சதவீதம் சங்குகள் அழுக்கு படிந்தும், முனை பகுதிகள் உடைந்தும் உள்ளன. இதனை பூஜைக்கு பயன்படுத்துவதை காணும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். கோயிலில் தீர்த்த நீராடல், தரிசன கட்டணம், உண்டியல் வருவாய் என ஓராண்டிற்கு ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வருவாய் கிடைக்கும் நிலையில் அழுக்கு படிந்து உடைந்த சங்குகளை பயன்படுத்துவது வேதனையளிக்கிறது. கோயிலுக்கு புதிய சங்குகள் வழங்க ஆன்மிக நன்கொடையாளர்கள் தயாராக இருந்தும் அதனை பெற ஹிந்து சமய அறநிலையத்துறை முன்வரவில்லை. கோயில் புனிதம், பக்தர்கள் நம்பிக்கையை பாதுகாத்திட புதிய அபிஷேக சங்குகள் வாங்கிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar