Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... தண்டுமாரியம்மன் கோவில் திருக்கல்யாணம்; குலவை ஒலி எழுப்பி பக்தர்கள் கோலாகலம் தண்டுமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் நடராஜருக்கு 16 வகை அபிஷேகம்; காலங்களை கணக்கிட்டு நடக்கிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் நடராஜருக்கு 16 வகை அபிஷேகம்; காலங்களை கணக்கிட்டு நடக்கிறது

பதிவு செய்த நாள்

23 ஏப்
2025
11:04

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும், புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ஆகும். இங்கு வருடத்திற்கு ஆறு முறை மகாபிஷேகம் நடக்கிறது.


மரகத நடராஜரின் சன்னதி முன்பாக உற்ஸவமூர்த்தியான நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபராதனைகள் நடக்கிறது. சித்திரை மாத ஓணம், ஆனி மாதத்தில் வரக்கூடிய உத்தரம், மார்கழியில் வரக்கூடிய திருவாதிரை ஆகிய மூன்று நட்சத்திரத்திலும் மற்றும் ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வரக்கூடிய சதுர்தசி திதியிலும் மகா அபிஷேகம் நடக்கிறது. அந்த வகையில் சித்திரை ஓணம் நட்சத்திரத்தை முன்னிட்டு உற்ஸவமூர்த்தியான நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணிக்குள் நிறைவேற்றப்பட்டு உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. வருடத்தில் 6 பருவங்களாக கணக்கிடப்பட்டு கார்காலம் (ஆடி ஆவணி), குளிர் காலம் (கார்த்திகை, மார்கழி) முன்பனிக்காலம் (தை, மாசி), பின் பனிக்காலம் (பங்குனி, சித்திரை) இளவேனிற் காலம் (பங்குனி, சித்திரை) முதுவேனிற் காலம் (வைகாசி, ஆனி) உள்ளிட்ட மாதங்களாகும். அபூர்வ பச்சை மரகத நடராஜருக்கு மட்டும் வருடத்தில் ஒரு நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று சந்தனம் படி களையப்பட்டு அருணோதய காலத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar