திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2025 11:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு தம் செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது.
* பால்சுனைகண்ட சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமானது.
* தென்பரங்குன்றம் நாகமுத்து மாரியம்மன் கோயிலில் பிரத்தியங்கிரா அம்பிகைக்கு நிகூம்பலா சத்ரு சம்ஹார ஹோமம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமானது.
* ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி., நகர் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வாராஹி அம்மன் கோயிலில் மகா வராஹி அம்மனுக்கு ஹோமம், அபிஷேகம், முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.