Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூரில் பிராமணர் சங்கத்தின் சமஷ்டி ... தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் பெருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் பெருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

05 மே
2025
12:05

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்திரை உத்திரப் பெருவிழா, 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டிற்கான உத்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.


இதில், காலை 5:30 மணிக்கு கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர் பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். விழாவையொட்டி தினமும், காலை 7:30 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பல்வேறு வாகனத்தில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். அதன்படி இரண்டாம் நாள் உத்சவமான இன்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் சுவாமி உலா வருகிறார். ஐந்தாம் நாள் உத்சவமான வரும் 8ம் தேதி இரவு திருக்கல்யாண உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான வரும் 10ம் தேதி காலை மகா ரதமும், 10ம் நாள் உத்சவமான வரும் 13ம் தேதி வெள்ளி ரதமும், 12ம் நாள் உத்சவமான வரும் 15ம் தேதி பஞ்சமூர்த்திகள் உத்சவமும் நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி, இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் சித்திரை உத்திரப் பெருவிழா நிறைவு பெறுகிறது. உத்சவத்தையொட்டி தினமும், மாலை 6:00 மணிக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அரங்கில், வாரியார் ஆன்மிக தொண்டு மன்றத்தினரின், திருமுறை, சொற்பொழிவு, இசை, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar