Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா.. கோஷத்துடன் பாலமலை ... நத்தம் கால பைரவர் கோவில்களில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு நத்தம் கால பைரவர் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி உற்சவ வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி உற்சவ வைபவம்

பதிவு செய்த நாள்

07 மே
2025
10:05

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமநவமி உற்சவ வைபவம் நடைபெற்றது.


காரமடை அரங்கநாதர் கோவிலில் அதிகாலை நடைதிறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் கால சந்தி பூஜை செய்யப்பட்டது. ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடையுடன், மேளதாளம் முழங்க, நான்கு ரத வீதிகள் வழியாக, வலம் வந்து கோவிலை அடைந்தார். ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்தத்தில், குலசேகர பெருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி பாசுரங்களை சேவித்தனர். அதைத் தொடர்ந்து உச்சிக்கால பூஜை சற்று முறைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், செயல் அலுவலர், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். காரமடையில் ஸ்ரீ ஜெய மாருதி சேவா சங்கத்தின் சார்பில், 39ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி உற்சவம் நடந்தது. சொர்க்கவாசல் வீதியில் அமைந்துள்ள ஜெய மாருதி சேவா சங்கத்தினர், ராமநவமி உற்சவத்தை விமர்சையாக நடத்தினர். சீதாராம, லக்ஷ்மண, ஆஞ்சநேயர் விக்ரங்களுக்கு விஷ்வக்க்ஷேனர், ஆராதனம், புன்யா வசனம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமபிரானுக்கும், சீதாப்பிராட்டிக்கும் விவாக சுப முகூர்த்தம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை உடுமலை ஸ்ரீதர் பாகவதர் குழுவினர் மற்றும் ஸ்ரீ பகவான் நாம பஜனை சபாவை சேர்ந்தவர்கள் நடத்தி வைத்தனர். சாற்றுமுறை மகா தீபாராதனைக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை ராமநவமி உச்சவ கமிட்டியினர், ஜெய மாருதி சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். இவ்விழாவில் அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar