Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்காடு காமாட்சி அம்மன் கோவில் ... கோவை முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம் கோவை முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெதர்லாந்தில் ஏலம் விட இருந்த கண்ணப்ப நாயனார் சிலை மீட்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெதர்லாந்தில் ஏலம் விட இருந்த கண்ணப்ப நாயனார் சிலை மீட்பு

பதிவு செய்த நாள்

07 மே
2025
11:05

சென்னை; நெதர்லாந்து நாட்டில் ஏலம் விட இருந்த, கண்ணப்ப நாயனார் உலோகச் சிலையை, தமிழக போலீசார் மீட்டுள்ளனர்.


நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில், தொன்மை வாய்ந்த கண்ணப்ப நாயனார் உலோகச்சிலை இருந்தது. இச்சிலையை, 15 ஆண்டுகளுக்கு முன், மர்ம நபர்கள் திருடி, வெளிநாட்டிற்கு கடத்திச் சென்று விட்டனர். இந்த சிலை திருட்டு தொடர்பாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து நாட்டின் நுண்கலை கண்காட்சியில், தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட கண்ணப்ப நாயனார் உலோகச் சிலை ஏலம் விட இருப்பதை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் தலைமையில், ஐ.ஜி., பிரவேஷ் குமார் ஆகியோர், நெதர்லாந்து நாட்டு போலீஸ் மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு, கண்ணப்ப நாயனார் சிலை தமிழக கோவிலுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை அனுப்பினார். அதன்படி, ஏலம் விடும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது; சிலையும் மீட்கப்பட்டது. தற்போது, நெதர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பராமரிப்பில் சிலை உள்ளது. இச்சிலையை தமிழகம் எடுத்து வர, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். சிலையை மீட்க காரணமாக இருந்த பிரவேஷ்குமார், தற்போது சென்னை மாநகர போலீசில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். சிலை மீட்பு பணியில் ஈடுபட்ட, கூடுதல் டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு, மலையப்ப சுவாமி தனது தேவியர்களான ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், நவராத்திரி கொலு விழாவையொட்டி, நாள்தோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar