Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தபசு திருக்கோலத்தில் அருள்பாலித்த ... வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா; குவியும் பக்தர்கள்.. பரவச தரிசனம் வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது; மே 12ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது;  மே 12ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

07 மே
2025
05:05

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று காலை சுந்தரராஜ பெருமாள், யாக மூர்த்தி, மூலவர் பரமசுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து தீர்த்த குடங்கள் யாகசாலையை அடைந்தது. பின்னர் பெருமாள் ஆடி வீதி வலம் வந்து யாகசாலை முன்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் 4 நாட்கள் யாக பூஜைகள் நடக்கும் நிலையில் மே 11 காலை யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, மூலவர், உற்ஸவர் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. அதிகாலை 2:00 மணிக்கு பெருமாள் பூப்பல்லக்கில் கோடாரி கொண்டையிட்டு, நெல் மணி தோரணங்கள் சூடி, ஈட்டி, வளரி, தடி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து அஷ்டாதச வாத்தியங்கள் முழங்க, ஏராளமான தீவட்டிகள் வெளிச்சத்தில் பக்தர்கள் புடை சூழ கருப்பண்ண சாமியிடம் விடை பெற்று பெருமாள் மே 12 அதிகாலை 4:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்க உள்ளார். தொடர்ந்து அன்று காலை குதிரை வாகனத்தில் அலங்காரமாகி தல்லாகுளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்க உள்ளனர். பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து, இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை அடைகிறார். மறுநாள் மண்டுக மகரிஷி சாப விமோசனம் நிறைவடைந்து தசாவதார சேவையும், தொடர்ந்து வைகையாற்றில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar