Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராயபுரம் மாகாளியம்மன் கோவிலில் ... மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் திருக்கல்யாணம் மானாமதுரை சித்திரை திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

08 மே
2025
01:05

மயிலாடுதுறை; சீர்காழி சட்டநாதர் சுவாமி  கோயிலில் பிரமோற்சவத்தில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டை நாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக நிகழ்வு திருமுலைப்பால் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 15 நாள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 1ம் தேதி இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி  நடைபெற்று வருகிறது. விழாவில்  இன்று 8ம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் விநாயகர், சுவாமி - அம்மன், திருஞானசம்பந்தர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளினார். சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது . தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. கீழவீதியில் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக திருத்தேர் வலம் வந்தது. வழியெங்கும் பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar