Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதர் கோவில் பிரம்மோத்சவம் ... பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வர்ராரு.. வர்ராரு.. அழகரு வர்ராரு... களை கட்டுகிறது கள்ளழகர் கோயில்
எழுத்தின் அளவு:
வர்ராரு.. வர்ராரு.. அழகரு வர்ராரு...   களை கட்டுகிறது கள்ளழகர் கோயில்

பதிவு செய்த நாள்

10 மே
2025
01:05

அழகர்கோவில் : மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக இன்று(மே 10) மாலை 6:00 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்படுகிறார்.

இன்று மாலை சுவாமிக்கு நுாபுர கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இதைதொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கண்டாங்கி பட்டுடுத்தி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். கோயிலை காக்கும் 18ம் படி கருப்பணசுவாமியிடம் சென்று வருகிறேன் என்றுக்கூறி விட்டு தங்கப்பல்லக்கில் வேல் கம்புடன் புறப்படுகிறார். நாளை காலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கும்.

இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமிக்கு பூஜை நடக்கிறது. மே 12 அதிகாலை ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். மதியம் 12:00 மணிக்கு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பர்.

இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி மே 13 சேஷ வாகனத்தில் புறப்படுகிறார். மதியம் வைகையாறு தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியை தொடர்ந்து மறுநாள் அதிகாலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளுகிறார்.மே 14 மதியம் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார். மே 16 காலை 10:00 மணி முதல் 10:25 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.


மண்டகப்படிகள் ஏன்

இன்று புறப்படும் கள்ளழகர், வரும் வழியில் 494 மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார். அக்காலத்தில் திருவிழாவிற்காக மக்கள் மாட்டு வண்டிகளில் புறப்பட்டு 10 நாட்கள் வரை வைகை கரையோரம், கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கினர். அவர்களின் தேவைகளுக்காக நீர், மோர் பந்தல், உணவு வழங்கப்பட்டது. தங்கி செல்ல மண்டபங்கள் கட்டப்பட்டன. பக்தர்களை தேடிவந்து அங்கு சுவாமி எழுந்தருளுவார். அது இன்றும் தொடருவது சித்திரைத்திருவிழாவின் சுவராஸ்யம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar