Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... திருப்பரங்குன்றம் லட்சுமி திருக்குளம் சீரமைப்பு; இறுதி கட்ட பணிகள் திருப்பரங்குன்றம் லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹோட்டலில் பரிமாறப்பட்ட புரி ஜெகன்னாதர் கோவில் பிரசாதம்; ஒடிஷாவில் பக்தர்கள் ஆவேசம்
எழுத்தின் அளவு:
ஹோட்டலில் பரிமாறப்பட்ட புரி ஜெகன்னாதர் கோவில் பிரசாதம்;  ஒடிஷாவில் பக்தர்கள் ஆவேசம்

பதிவு செய்த நாள்

19 மே
2025
11:05

புரி; சர்வதேச அளவில் புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோவில் பிரசாதத்தை, ஒடிஷாவின் கடற்கரையோர ரிசார்ட்டில், சாப்பாட்டுடன் பரிமாறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிஷாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் புரியில் கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மிகப் பிரபலமான புரி ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடவுள் ஜெகன்னாதருக்கு படைக்கப்பட்ட ‘மஹா பிரசாதத்தை’ பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். மிகுந்த பக்தி மற்றும் மரியாதை காரணமாக, மஹா பிரசாதத்தை தரையில் அமர்ந்தபடி சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில், ஒடிஷாவின் புரி கடற்கரையோரம் அமைந்துள்ள ‘ரிசார்ட்’ எனப்படும் தங்கும் விடுதியுடன் கூடிய ஹோட்டல் ஒன்றில், ‘மஹா பிரசாதம்’ வினியோகிக்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவில், டைனிங் டேபிளை சுற்றிலும் ஒரு குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 10 பேர் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு புரி ஜெகன்னாதர் கோவில் மஹா பிரசாதத்தை அர்ச்சகர் ஒருவர், சாப்பாட்டுடன் பரிமாறுகிறார். அப்போது ஒருவர், அர்ச்சகரிடம், இதுபோன்று செய்வது ஏன் என கேள்வி எழுப்பியதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, ஜெகன்னாதர் கோவில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘இறைவனின் தெய்வீக மஹா பிரசாதமானது, அன்ன பிரம்மாவின் வடிவமாக வழிபடப்படுகிறது. ‘இந்த பிரசாதத்தை தரையில் அமர்ந்து தான், சாப்பிட வேண்டும் என்ற பாரம்பரிய நடைமுறை, பழங்காலத்தில் இருந்தே பின்பற்றப்படுகிறது.எனவே, யாராக இருந்தாலும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி மஹா பிரசாதத்தை சாப்பிடும் செயல்களை தவிர்க்க வேண்டும். ‘பக்தர்களின் உணர்வுகள், மத நம்பிக்கையை கருதி, புரியில் உள்ள ஹோட்டல்கள், தங்கள் விருந்தினர்களிடம் இதுபோன்று செய்யக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் தொடர்ச்சியாக இன்று தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் தாயார் பூச்சாற்று உற்சவம், வெளிக்கோடை 5ம்நாளில் சிறப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தேரழந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஏப்.,4ல் புதிதாக ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், 11ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar