Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ... கயானாவின் ஸ்பார்டா கோவிலில் 16 அடி உயர ஹனுமான் சிலை திறப்பு கயானாவின் ஸ்பார்டா கோவிலில் 16 அடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வேடுபறி வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வேடுபறி வைபவம்

பதிவு செய்த நாள்

19 மே
2025
03:05

சென்னை; காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவ பெருமான் நான்கு மாட வீதிகளில் வேடுபறி வைபவம் கோலாகலம் நடத்தப்பட்டது 


சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றுத்துடன் தொடங்கி வெகுமதி விமரிசையாக நடைபெற்று வருகிறது. குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவ பெருமான் ஸ்ரீ பவளவன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார் தர்மராஜா கோவில் அருகே எழுந்தருளிய உற்சவர் வேடுபறி வைபவத்தில் காட்சியளித்தார். திருமங்கை ஆழ்வார் என்று அழைக்கப்படும் திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், பெருமாள் தொண்டு தொடர வழிப் பறியில் ஈடுபட்டார். இவரை தடுத்தாட் கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக் காட்டி, பின்னர் அவரது காதில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்ட விதம் வேடுபறி உற்சவமாக பக்தர்களின் முன்னிலையில் நடத்திக் காட்டப்பட்டது.


உற்சவத்தின் 8வது நாள் நிகழ்ச்சியாக, திருமங்கையாழ்வாருக்கு ஞானம் அளிக்கும் திருவேடு பறி உற்சவம் நடந்தது. விஷ்ணு பக்தனான திருமங்கையாழ்வார், வைணவ பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்பியபோது, அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் திருமங்கையாழ்வார் அன்னதானம் வழங்கி வந்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்க நிதி இல்லாதபோது, அதிக பொருள் உள்ளவர்களிடம் வழிப் பறியில் ஈடுபட்டார். இவரை திருத்த பெருமாள் திருமண கோலத்தில் ஆபரணங்களுடன் தம்பதியாக எழுந்தருளினார். பெருமாள் என்பதை தெரியாமல், தம்பதியரை இடைமறித்து திருமங்கையாழ்வார் நகைகளைப் பறித்தார். கடைசியாக பெருமாள் காலில் இருந்த மெட்டியைக் கழற்ற முயற்சித்தபோது, அவரின் திருமுடி பெருமாளின் திருவடியில் பட்டு ஞானம் பெற்று திருந்தியதாக வரலாறு கூறப்படுகிறது. இக்கதையை விளக்கி ஒவ்வொரு ஆண்டும் வேடுபறி உற்சவம் நடக்கிறது. உற்சவத்தின்  எட்டாவது நாளில் வேடுபறி நிகழ்ச்சியில் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar