Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் ... தேய்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வாராகி அம்மனுக்கு அபிஷேகம் தேய்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2025
10:06

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் நடைபெற்றது.


தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் 91ம் ஆண்டாக நடைபெறும் இந்த விழா நேற்று  தொடங்கியது. இதில், வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. பின்னர், வெண்ணாற்றங்கரையிலிருந்து இன்று (16ம் தேதி) காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு, 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோவில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இதைத்தொடர்ந்து, 17ம் தேதி காலை நவநீத சேவை நடைபெறவுள்ளது. இதில், வெண்ணாற்றங்கரையில் 17ம் தேதி காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10:30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடைபெறும்.  இதில், 16 கோவில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கவுள்ளனர். வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் ஜூன் 18ம் தேதி காலை 9:00 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar