Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்மலை கருப்பசாமி கோவிலில் ... காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா; பந்தகால் முகூர்த்தம் காரைக்கால் அம்மையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சேரிமலையில் சேதமடைந்த முருகன் சிலை; புனரமைப்பதில் சுணக்கம் என குச்ச்சாட்டு!
எழுத்தின் அளவு:
செஞ்சேரிமலையில் சேதமடைந்த முருகன் சிலை; புனரமைப்பதில் சுணக்கம் என குச்ச்சாட்டு!

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2025
05:06

பல்லடம்; செஞ்சேரிமலை  முருகன் கோவிலில் ஓராண்டுக்கு முன் சேதமடைந்த முருகன் சிலையை புனரமைப்பதில் அறநிலையத்துறை சுணக்கம் காட்டி வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் செஞ்சேரிமலை முருகன் கோவில் உள்ளது. மூலவராக மந்திரகிரி வேலாயுத சுவாமி அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருத்திகை,  சஷ்டி, பிரதோஷம் உட்பட, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், படிக்கட்டுகள் வழியாக மலைக்குச் செல்லும் வழியில் குழந்தை குமாரர் கோவில் உள்ளது. இதிலுள்ள முருகன் சிலை கடந்த ஓராண்டுக்கு முன் சேதப்படுத்தப்பட்டது. இதில், முருகன் சிலையின் வலது கை மற்றும் மயிலின் தலையும் உடைபட்டது. இச்சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், சிலை புனரமைக்கப்படாதது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.


இது குறித்து பக்தர்கள் கூறுகையில், மனநலம் பாதித்த ஒருவரால், கடந்த ஓராண்டுக்கு முன் குழந்தை குமாரர் சிலை சேதப்படுத்தப்பட்டது. சிலை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில், ஆறு மாதத்துக்கு முன் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அறநிலையத்துறை இணை கமிஷனர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சிலையை புதுப்பிக்க உத்தரவிட்டார். உபயதாரர்கள் உடனடியாக சிலையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி, புதிய சிலை தயாராகி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், சிலையை பிரதிஷ்டை செய்யாமல், பழைய உடைந்த சிலையை  அகற்றாமலும் அறநிலையத்துறை அலட்சியம் காட்டி வருகிறது. உடைந்த சிலையை உடனடியாக அகற்றி, தயாராக உள்ள புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்ய அறநிலையத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar