Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த ... சுந்தராபுரம் முனியப்ப சுவாமி கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம் சுந்தராபுரம் முனியப்ப சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2025
10:06

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயமுத்துார், திருப்பூர், ஈரோடு கரூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள்,பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.


திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் , பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில், ரயிலடி விநாயகர் கோயில்,என்.ஜி.ஓ., காலனி சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மிளகு, தேங்காய், வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர். நத்தம் : குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயில் கால பைரவர் சன்னதியில் 16 வகை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் காலபைரவர் சன்னதியிலும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. சின்னாளபட்டி : சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar