திருவட்டார் பரளியாற்றில் மஹா ஆரத்தி விழா உழவாரப்பணி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2025 11:06
திருவட்டார்; திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் மேற்கு வாசல் பகுதியில் ஒடும்பரளியாற்றின்கரை யோர பகுதிகளை முன்னாள் ராணுவ வீரர்கள் சுத்தம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் 76வது புண்ணிய தலமாக விளங்குவது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகும். இக்கோவிலை சுற்றி ஓடும் பரளியாறு அருவிக்கரை சப்த கன்னிகை, கோவிந்தம், அமிர்தம், ராமம், திருப்பாதக்கடவு, சக்கரம் புண்ணிய தீர்த்தங்கள் என்ற பெயரில் ஆறு இடங்களில் அருள் பாலிப்பதாக நம்பிக்கை. நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், தூய்மையாக வைத்திருக்கவும், ஜீவ நதிகளை நிலைபெறச் செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை மையமாக கொண்டு மஹா ஆரத்தி பெருவிழா வரும் 24ம் தேதி செவ்வாய் கிழமை மாலை 5 துவங்குகிறது. மணிக்கு இதற்காக ஆதிகேசவ பெருமாள் கோவில் மேற்கு வாசலை ஒட்டி பரளியாறு ஒடும் பகுதியில் உள்ள படித்துறை மற்றும் ஆரத்தி நடக்கும் பகுதிகளில் வளர்ந்திருந்த புதர்கள், செடிகளை முன்னாள் ராணுவ வீரர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். இந்த உழவாரப்பணியில் முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.