சபரிமலையில் காணாமல் போன 102 அலைபேசிகள்; கம்பம், தேனியில் மீட்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2025 11:06
கம்பம்; சபரிமலையில் கடந்த சீசனில் காணாமல் போன 102 அலைபேசிகளை, கம்பம், தேனி, ஆந்திராவில் இருந்து கேரள போலீஸ் மீட்டுள்ளது,
சபரிமலையில் ஆண்டுதோறும் மகர விளக்கு மண்டல பூஜை சீசனில் பக்தர்களிடமிருந்து பணம், நகை, அலைபேசிகள் திருடு போவது மற்றும் , பக்தர்கள் தவற விடுவது வாடிக்கையாகும். அந்த வரிசையில் கடந்த சீசனில் அலை பேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காணாமல் போனதாக பம்பா போலீசில் 230 புகார்கள் பதிவு செய்யப்பட்டது. காணாமல் போன அலைபேசிகளை சென்ட்ரல் எக்யூப்மெண்ட் ஐடன்டிடி ரிஜிஸ்தர் ( CEIR ) என்ற போர்டலை பயன்படுத்தி பம்பா போலீசார் பிளாக் செய்தனர். அவ்வாறு பிளாக் செய்த அலைபேசிகளை மீண்டும் ஆன் செய்தவுடன், அலைபேசி நெட்ஒர்க் சேவை வழங்கும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் மற்றும் புகார்தாரருக்கு அலை பேசியின் லொக்கேசனை தகவல் தெரிவிக்கும். அந்த தகவலை தொடர்ந்து பம்பா போலீசார் 102 அலைபேசிகளை மீட்டனர். மீட்கப்பட்ட அலைபேசிகள் பெரும்பாலும் கம்பம், தேனி , ஆந்திரா மாநிலத்தில் சில நகரங்களில் இருந்தும் என பம்பா போலீசார் தெரிவித்துள்ளனர். பத்தனம்திட்டா போலீசார் கம்பம் பகுதியில் இது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.