Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் ... ஸ்ரீ ஶ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமி கோவை வருகை ஸ்ரீ ஶ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நலன் வேண்டி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர வேள்வி பாராயணம்
எழுத்தின் அளவு:
உலக நலன் வேண்டி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர வேள்வி பாராயணம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
05:06

 திருப்பூர்; உலக நலன் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா ருத்ர வேள்வி பாராயணம் நடைபெற்றது. 


பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் –மஹாலட்சுமி தம்பதியரின் மணிவிழாவை முன்னிட்டு, உலக நலன் வேண்டியும், தொழில்வளம் சிறக்க வேண்டியும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹாருத்ர யாகபூஜை நடந்தது. அவிநாசி சிவாச்சார்யார்கள், ஸ்ரீகுருகுலம் ஆகம வித்யார்த்திகள் என, நுாற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்று, மஹா ருத்ரயாக வேள்வி நடத்தினர். கடந்த, 19ம் தேதி மாலை துவங்கி, நேற்று காலை வரை நடந்தது. இன்று காலை நடந்த இரண்டாம் கால மஹா ருத்ர வேள்வியை தொடர்ந்து கலசாபிஷேகம், உலக நலன் வேண்டி பொது பிரார்த்தனை நடந்தது. ஸ்ரீமஹாதேவி ருத்ர மண்டலம், ஸ்ரீசிவ ருத்ர மண்டலம், ஸ்ரீ ஸ்ரீசங்கரருத்ர மண்டலம், ஸ்ரீநீலலோஹித மண்டலம் என, பல்வேறு மண்டலங்கள் அமைத்து, மஹாருத்ர வேள்வி பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது. பூஜை நிறைவாக, தருமபுர ஆதினம் மற்றும் பிற ஆதினங்கள் பங்கேற்று வழிபட்டனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் குளத்துக்கு சென்று வழிபட்டார்.  தொடர்ந்து, பாதிரி அம்மன், பாதிரி மரத்தை வழிபட்டு, தல விருட்சத்தின் வரலாறுகளை கேட்டறிந்தார். மங்கள இசை, பூரண கும்ப மரியாதையுடன் சிவாச்சாரியார் கோவிலுக்குள் அழைத்துசென்றனர்.  அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மனை வழிபட்டு, சிவாச்சாரியார் மற்றும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar