Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை ... மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க ஆய்வு மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2025
08:06

விழுப்புரம்; விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.


விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் குபேரன் தகவலில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உட்பட குழுவினர் கள ஆய்வு செய்தனர். அப்போது, பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்த தேவி சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர்.


அதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: அத்தியூர் திருவாதி கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றின் வடக்கு கரையில் கிடந்த சிலையை பார்த்த அப்பகுதி மக்கள், அங்கு சிறிய கோவில் அமைத்து, அம்மன் என வழிபட்டு வருகின்றனர். அதிலிருந்த சிற்பம், ஜேஷ்டாதேவி என்றழைக்கப்படும் மூத்ததேவி சிற்பமாகும். அச்சிற்பம், பல்லவர் காலம் கி.பி., 7,- 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஜடாபாரம் எனப்படும் உச்சிகொண்டையுடன் கூடிய தலை அலங்காரத்துடன், அந்த மூத்த தேவி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. காதணிகள், கழுத்தணி, சரிந்த வயிற்றுடன் அழகாக காட்சியளிக்கிறார். இடுப்பு முதல் கணுக்கால் வரை இடை ஆடை காட்டப்பட்டுள்ளது. வலது கரம் தாமரை மொட்டினை ஏந்தியும், இடது கரம், செல்வ குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. இரு கால்களையும் அகட்டி தொங்கவிட்ட நிலையில் பத்திராசனத்தில் அமர்ந்து இருக்கிறார். மூத்த தேவியின் இருபக்கங்களிலும் அவளது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் குழந்தை வடிவில் உள்ளனர். பொதுவாக மூத்த தேவி சிற்பங்களில், காக்கை கொடி ஓரிடத்தில் மட்டுமே காட்டப்பட்டிருக்கும். ஆனால், இந்த சிற்பத்தில் வலது, இடது என இரு பக்கங்களிலும் காக்கை கொடி காட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், ஏற்கனவே நன்னாடு உட்பட பல்வேறு பகுதிகளில் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பம், பல்லவர் கலை வரலாற்றுக்கு புதிய வரவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை – திருப்பதியில்  ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக விழாவான நவராத்திரி  ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் ஆவணி மூல திருவிழாவில் பாண்டியராஜாவாக ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்த ஜூலையில் கும்பாபிஷேகம் நடந்ததை ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar