Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால ... திருமலை திருப்பதி கோயிலில் செப், தரிசன முன்பதிவு அறிவிப்பு திருமலை திருப்பதி கோயிலில் செப், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க ஆய்வு

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2025
08:06

கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை மற்றும் முருகன் வரலாறு கூறும் அருங்காட்சியகம் அமைக்க, அரசு துறை உயரதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.


கோவை மாவட்டம் மருதமலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவில் அடிவாரத்தில், 110 கோடி ரூபாயில், 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார், திரைப்பட கலை இயக்குனர் சாபு சிரில், அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், சிலை அமைவிடம், அடிவாரம், அதனைச் சுற்றி அமைய உள்ள அருங்காட்சியகம், அதிநவீன வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக, நேற்று ஆய்வு செய்தனர். அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், வனத்தை பாதிக்காத வகையில் சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்லும் வரை, மருதமலை முருகனின் வரலாற்றை நினைவில் கொள்ளும் வகையில், வழியெங்கும் முருகன் சார்ந்த சிலைகள், ஓவியங்கள், மின் விளக்குகளை, ஆன்மிகத்தை சார்ந்தும், வனத்தை பாதிக்காமலும் அமைக்கலாம் என, கலை இயக்குனர் சாபு சிரில் ஆலோசனை தெரிவித்தார். அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரையுள்ள படிக்கட்டு பாதையை சீரமைத்து, நகரும் படிக்கட்டு அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar