Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 16ம் நுாற்றாண்டு புடைப்பு சிற்பம்: ... ராம்நகர் அய்யப்பன் பூஜா சங்கத்தில் சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ராம்நகர் அய்யப்பன் பூஜா சங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சொத்து இருக்கு... கோவிலை தான் காணோம்!
எழுத்தின் அளவு:
கோவில் சொத்து இருக்கு... கோவிலை தான் காணோம்!

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2025
01:06

 – நமது நிருபர் –


பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கோவில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்நிலையில், கோவில் இருந்ததற்கான அடையாளமே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. சின்ன நெகமத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 7 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், கோவில் இருந்த இடம், புதர் மண்டி காணப்படுகிறது. கோவில் இருந்ததற்கான அடையாளமாக துாண்களும், ஒரு கல்வெட்டு மட்டுமே மிஞ்சியுள்ளன.


கல்வெட்டு குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘கல்வெட்டுகள், 17ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. 10வது நெகமம் பாளையப்பட்டு முத்து வல்ல கொண்டம்ம நாயக்கர் காலம்; 1659 – 1673ம் ஆண்டாக உள்ளது. கல்வெட்டின் இருபுறமும் ஆராய்ச்சி செய்து பார்த்தால், முழு விபரங்கள் கிடைக்கும்’ என்றனர்.


கொல்லப்பட்டியில், பழமை வாய்ந்த வெங்கிடரமணசுவாமி கோவில் என, ஆவணங்களில் உள்ளது. அந்த இடத்தில், கோவிலுக்கான எவ்வித அடையாளமும் இல்லை. தற்போது மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், பள்ளி வளாகம் அமைந்துள்ளன.


கோவிலை காணவில்லை என்றாலும், கோவிலுக்கு சொந்தமான, 12 ஏக்கர் நிலம், ஆ.நாகூர் பகுதியில் உள்ளது. ஆவணங்களில் உள்ள கோவில் மறைந்து போனது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, கோவிலை மீட்டெடுக்கவும், கோவில் சொத்து வாயிலாக வருவாய் ஏற்படுத்தி, கோவில் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்காதது புரியாத புதிராக உள்ளது.


ஆவலப்பம்பட்டியில் வேலாயுதசுவாமி கோவிலை பார்வையிட சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமாக, 40 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், பராமரிப்பு இல்லாமல் கோவில் சிதிலமடைந்துள்ளது.


முருக பெருமானுக்கு அங்கவஸ்திரம் கூட அணிவிக்காமல், சிலைக்கு மட்டும் பூஜை நடத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். நிலத்தை அனுபவிப்பவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்ததுடன், கோவிலை பராமரிக்க அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நிலங்களை மீட்க சென்றால், அரசியல் தலையீடுகள், மிரட்டல்கள் வருகின்றன. இதையெல்லாம் தாண்டி நிலத்தை மீட்டெடுக்க நினைத்தாலும், பாதுகாப்பு இல்லாத சூழலே உள்ளது. இப்பிரச்னைகளை உயர்மட்டத்துக்கு எடுத்து சென்று, கோவில் நிலங்களை மீட்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
காட்டுமன்னார்கோவில்;  ஆதனூர் சௌந்தரநாயகி அம்பா சமேத சிவலோகநாத சுவாமி திருக்கோயில் மகா ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் வெகு விமர்சியாக ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar