Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் சொத்து இருக்கு... கோவிலை ... மதுரையில் 5 லட்சம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்; முருக பக்தர்கள் மாநாட்டில் பரவசம்! மதுரையில் 5 லட்சம் பேர் பாடிய கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம்நகர் அய்யப்பன் பூஜா சங்கத்தில் சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
ராம்நகர் அய்யப்பன் பூஜா சங்கத்தில் சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2025
01:06

கோவை: ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமியின் ஜென்ம தின வைபவத்தை முன்னிட்டு, கோவை ராம்நகர் அய்யப்பன் பூஜா சங்கத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


கோவைக்கு வருகை தந்துள்ள, ஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி ந்ருஸிம்ஹ பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமிகள், இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


நேற்று காலை, 8:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் விசேஷ திருமஞ்சனம் சங்கல்ப சேவை, கொங்கு மண்டல நாம சங்கீர்த்தன குழுவினரின், அகண்ட நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடந்தன.


காலை 11:30 மணிக்கு, மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பட்டுப்புடவை, திருமாங்கல்யம், திருமண மாலைகள், பழங்கள், பட்சணங்கள் என, 51 வகையான சீர்வரிசைகளுடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது.


அதன்பின் ஊஞ்சல் சேவா, மாலை மாற்றுதல், பிடி சுற்றுதல் நிகழ்வுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், மாலை, 3:00 மணிக்கு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


மாலை 5:00 மணிக்கு, கோவை மாநகர பக்தர்களுடன் சுவாமிகளின் நகர்வலம் நடந்தது. இதில், தையம், செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட நான்கு விதமான கலைஞர்கள் பங்கேற்றனர். இரவு 7:30 மணிக்கு, ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜை நடந்தது.



இன்றைய நிகழ்ச்சிகள்


இன்று காலை 7:30 மணிக்கு, ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் சிறப்பு ஆஹ்னிகா தரிசனம் நடக்கிறது. காலை 9:30 முதல் காலை 10:30 மணி வரை, லட்சுமி ந்ருஸிம்ஹ சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.


காலை 10:30 மணிக்கு, சண்டிகா ஹோமம் மற்றும் ஆயுஷ்ய ஹோம பூர்ணாஹூதி நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு மஹாஸ்வாமிகளின் அனுகிரஹபாஷணம் நடக்க உள்ளது. மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை, சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை குறைக்க ரூ.ஒரு லட்சம் செலவில் 1000 அடி ... மேலும்
 
மேலுார்: தும்பை பட்டி வீரகாளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar