பழநி கோயிலில் ஆனி மாத கார்த்திகை; மூலவருக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2025 10:06
பழநி; பழநி கோயிலில் ஆனி மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழநி கோயிலில் ஆனி மாத கார்த்திகை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜையில் நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை மற்றும் ரோப்கார், வின்ச் மூலம் கோயில் சென்றனர். ரோப்கார், வின்ச்சில் நீண்ட நேரம் காத்திருந்தனர். குத்து விளக்கு பூஜை திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். கார்த்திகை விரதம் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பழநி பஸ் ஸ்டாண்டில் மாலை நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் சிரமம் அடைந்தனர்