Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் அகோபிலமடம் ஜீயர் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆனி கிருத்திகை விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆனி கிருத்திகை விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2025
11:06

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆனி கிருத்திகை விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி பெருமாள் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்றும், ஆனி மாத கிருத்திகை விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை 3:00 மணியளவில், கோவில் நடை திறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளுடனும் கிருத்திகை வந்ததால், சுவாமியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். பக்தர்களில் பலர் காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இத்துடன், வட்ட மண்டப தொட்டியில் உப்பு, மிளகு ஆகியவற்றை, பிரார்த்தனையாக செலுத்தினர். ஆடு, சேவல்களை பிரார்த்தனையாக கோவிலுக்கு விட்டனர். சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகர் உருவ பொம்மைகளை, உண்டியல்களில் போட்டனர். மாலையில் கந்தசுவாமி பெருமான், வள்ளி மற்றும்- தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் திருவீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகம், மாடவீதிகள் என, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு, பரணி உத்சவத்தில் கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அர்ச்சனை செய்து கந்த பெருமானை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar