Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி கிருத்திகை; சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை அருகே மண்ணரிப்பால் சிதைந்த சங்க கால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
தஞ்சை அருகே மண்ணரிப்பால் சிதைந்த சங்க கால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2025
11:06

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், பாளையப்பட்டி பகுதியில், ஈமத்தாழிகள் கிடப்பதாக, முன்னாள் பஞ்., தலைவர் கமலதாசன் தகவலில், கல்வெட்டு ஆய்வாளரும், மன்னர் சரபோஜி அரசு கல்லுாரி தமிழ்துறை பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தில்லைகோவிந்தராஜன், வழக்கறிஞர் ஜீவக்குமார், ஓய்வு பெற்ற சரஸ்வதி மகால் நுாலக விற்பனை எழுத்தர் நேரு ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.


இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: பண்டைய தமிழகத்தில், இறந்தவர்களின் உடல்களை வைத்து, மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதை கலன்களே, ஈமத் தாழிகள். இதற்கு, முதுமக்கள் தாழி, முதுமக்கள் சாடி, ஈமப்பேழை, மதமதக்கா பானை என பெயர்களும் உண்டு. முதுமக்கள் தாழி அடக்க முறை, சங்க காலத்தில் இருந்து வருவதாக, சான்றாக, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்னும் சோழ மன்னன் இறப்பை குறித்து, ஐயூர் முடவனார் என்பவர், பெரிய உருவம் கொண்ட கிள்ளிவளவனுக்கு ஏற்ப தாழி செய்ய முடியுமா என குயவனிடம் கேட்டதாக, புறநானுாறு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. படை வீரர்கள் தங்கும் பகுதி, பாளையம் என அழைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவேஇவ்வூருக்கு, பாளையப்பட்டி என பெயர் வந்தாக வரலாறு உண்டு. ஈமத்தாழியை ஒட்டி ஓடும் வாரியை, தாழிவாரி என அழைக்கப்பட்ட நிலையில், திரிந்து தாழவாரி என மாறியுள்ளது.


இப்பகுதி, 54 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக அமைந்துள்ளது, இது சோழ மண்டலத்துள் கண்டறியப்பட்ட பெரிய ஈமக்காடுகள். அகன்ற வாய்களை கொண்ட தாழிகளின் கழுத்துப்பகுதியில் சங்கிலி கோத்தது போன்ற அழகிய வேலைப்பாடு காணப்படுகிறது. 25க்கும் மேற்பட்ட தாழிகள் மண்ணரிப்பால் சிதைந்து கிடக்கின்றன. இதில் இரும்பாலான பொருட்களின் எச்சங்களும் சிதைந்த நிலையில் உள்ளன. மேலும், போரில் இறந்தவர்களின் சடலத்தை எரித்து, எஞ்சிய சாம்பலைச் சிறிய மட்கலயங்களில் போட்டு, புதைத்திருக்க வேண்டும் என தெரிவருகிறது. மேலும், இங்கு மனிதர்கள் வசித்ததற்கான பல்வேறு சான்றுகள் உள்ளன. எங்களால் ஆய்வு செய்யப்பட்ட இடம், அரசுக்கு சொந்தமானது. எனவே, தமிழ் பல்கலைக் கழகத் தொல்லியல் துறை, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையால் ஆய்வு செய்தால், சோழ மண்டலத்துச் சங்க காலத் தொன்மை வரலாற்றையும், அக்கால மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டினையும் வெளிக்கொண்டு வர முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar