Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம்; அம்மன் கோவில்களில் ... கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தியால் கடவுளையும் கட்டிப்போட்ட முன்னோர்கள் காமாட்சிபுரி ஆதீனம் அருளாசி!
எழுத்தின் அளவு:
பக்தியால் கடவுளையும் கட்டிப்போட்ட முன்னோர்கள் காமாட்சிபுரி ஆதீனம் அருளாசி!

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2025
04:06

பல்லடம்; பக்தியால், அன்பால், கடவுளையும் கட்டிப் போட்டவர்கள் நம் முன்னோர்கள் என, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை வழிபாட்டின் போது, காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.


பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்து கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: கோள் என்றால் வினை; பதி என்றால் அறுக்குக்கூடியது. வினைகளை எல்லாம் அறுக்கக்கூடிய கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர், மூன்று வயது குழந்தையாக இருக்கும்போது அம்பாளின் அருள்பெற்று பாடினார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டவர் சிவபெருமான். அடியவர்கள் அடித்தாலும் அதை வாங்கிக் கொள்வார். வழி கொடுப்பதும்; வழி காட்டுவதும் அவரே. கடவுளை வணங்கும் நேரத்திலும் கூட மனிதர்களின் மனம் அலை பாய்கிறது. பல மணி நேரம் கோவிலில் காத்திருந்து, ஒரு நொடி இறைவனை தரிசிக்காமல் செல்வதால் பயன் இல்லை. அதற்கும்கூட, இறைவனின் அருள் வேண்டும். சரியான வழியில், சரியான நெறியில் செல்லாவிட்டால் சிக்கல்தான் வரும். ஒருவருக்கு கஷ்டம் வந்துவிட்டால், கடவுள் அவர் அருகே வந்துவிட்டார் என்று அர்த்தம். பக்தியால், அன்பால் கடவுளையே கட்டிப் போட்டவர்கள் நம் முன்னோர்கள். அகத்தின் அழுக்கை சுத்தம் செய்ய இறைவன் நாமம் மட்டுமே உதவும். எந்த சோதனை வந்தாலும் அதை தாங்கும் சக்தியை‌ கடவுள் தந்து விட்டால், அதிலிருந்து விடுபடும் வழியும் கிடைத்து விடும். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே. பெயர் வைப்பது முதல், வாழ்க்கையின் அனைத்து விதிகளையும் தீர்மானிப்பவர் அவரே. என்ன சோதனை வந்தாலும் அவற்றை சந்திக்கும் தைரியத்தை கடவுள் அனைவருக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு நடந்த மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாட்டு‌ நடந்தது. பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களால், பக்தர்கள் நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar